"என் ரதத்தின் ரத்தமே" - புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்

 



எனது ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களே!


எவ்வளவு பெரிய அறிவாளியாக திறமைசாலியாக இருந்தாலும் ஒரு தனி மனிதனால் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது.

உங்களை போன்ற கோடிக்கணக்கான மக்கள் ஒத்துழைக்க முன் வந்தால் தான் நல்லவைகளைச் செயல்படுத்த முடியும். நல்லவை என்றும் குறிப்பிட்ட ஒரு தனி மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல; அந்தக் கொள்கையை ஏற்றுக் கொன்டுள்ள அனைத்தவர்களுக்கும் சொந்தமாகும். அப்படியானால் அந் அனைவரில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்று நல்ல காரியத்தை நல்லவர்களின் துணையோடு நிறைவேற்ற முடியும்.

எனவே நமது கொள்கையாகிய "அண்ணாயிசத்தைப் பரப்புங்கள், அனைவரும் அதைப் புரிந்து கொள்ளும்படி செய்யுங்கள்.

அண்ணாவின் பண்புள்ள வழித் தோன்றல்களான தொண்டர்கள் படித்த இளைஞர்களையும் தங்களைப்போல் நாட்டினை மேம்படுத்த முன் வரும்படி செய்யவேண்டும்.அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றுவதை விட அண்ணாவின் புகழைக்காக்க வேறு வழியே கிடையாது. அண்ணாயிசத்தை ஏற்றுக் கொள்கின்றவர்கள்;அதற்கு இழுக்கு ஏற்படாமல் செயல்பட்டவர்கள் செயல்படுகின்றவர்கள் அண்ணா தி.மு.க.வில் சேர்வதால் அண்ணா வின் கொள்கைக்கு வலு ஏறும்.

ஆனால் அவர்களின் கை கறைபடாத கையாக இருக்க வேண்டும். தியாகத்திற்கு விலை மதிப்பு கிடையாது.

தியாகம் தன் வாழ்வுக்காகச் செய்வதல்லபிறர் வாழ்வதற்காகச் செய்வது.

இன்றைய அண்ணா.தி.மு.க. தொண்டர்கள் செய்யும் தியாகங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை ஒளி மயமாக்குவதற்காக அந்த ஒளிக்கதிர் இந்திய துணைக்கண்டம் எங்கணும் பரவி, அனைத்துலகிலும் நல்ல பயிர்கள் (கொள்கைகள்) வளர, உதவி செய்வதாகும்.

 எனவே நம்முடைய அண்ணாவின் கொள்கையின் அறவழியில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் நன்மை பயக்கவேயாம்.

 

அன்பன்

எம்.ஜி.ராமச்சந்திரன்




#எம்ஜிஆர்

Comments