இரண்டு வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் பம்பாய் செல்லும்
வைகவுண்ட் விமானத்தில் வீனஸ் பிக்சர்ஸ் கிருஷ்ணமூர்த்தியும்,
'சித்ரா'
கிருஷ்ணசாமியும்
சென்று கொண்டிருந்தார்கள்.
பேச்சு வாக்கில், தான் எடுக்கப் போகும் சூரஜ் ஹிந்திப் படத்தின் கதையைப்பற்றி
கிருஷ்ணமூர்த்தி சித்ராவிடம் குறிப்பிட்டார். 'என்னிடம் இரண்டு கதைகள் சொல்லப்பட்டன. எனக்கு இது ரொம்பவும்
பிடித்திருந்தது. எனவே இதையே எடுக்கப் போகி றேன்''
என்று சூரஜ்
கதையைப் பற்றிச் சொன்னார் கிருஷ்ண மூர்த்தி .
''அந்த மற்றொரு கதை என்ன?''
என்று கேட்டார்
சித்ரா. "அதைச் சொல்லட்டுமா?'' என்று சொல்லி அந்தக் கதையைச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.
பம்பாய் வந்தது. இருவரும் தங்கள் தங்கள் வேலைகளைக் கவனிக்
கப் போய் விட்டார்கள்.
இரண்டு வருஷங்கள் சென்றன.
'கர்ணன்', 'முரடன் முத்து' படங்களை வெளியிட்ட பின், பத்மினி பிக்சர்ஸார், சண்டைகள் நிறைந்த படமொன்றைத்
தயாரிக்கத் திட்டமிட்டார்கள்.
இரண்டு வருஷங்களுக்கு முன்பு
பம்பாய் செல்லும் வழியில் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி சொன்ன கதை 'சித்ரா', கிருஷ்ணசாமிக்கு, உடனே
நினைவுக்கு வந்தது. பி.ஆர்.பந்தலுவிடம் இதைச் சொல்லவே, அவர்
கிருஷ்ண மூர்த்தியை பார்த்துவிட்டு, வரச் சொன்னார்.
கிருஷ்ணமூர்த்தியிடம்
வந்தார் சித்ரா. அந்தக் கதையைக் கேட் டார்.
கே.ஜே.மகாதேவனுடைய கதை அது'' என்று சொல்லி, மகாதேவனிடம் சொல்லி, கதையை வாங்கிக் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.
அதுதான் “ஆயிரத்தில் ஒரு வன்'' கதை.
கதையைக் கேட்ட 'எல்லாருமே இதில் வரும் கதாநாயகன் வேஷத் திற்கு எம்.ஜி.ஆர். தான் பொருத்தமாக
இருப்பார் என்று ஒரு , மன தாகச் சொன்னார்கள்
பத்மினி பிக்சர்ஸ்
தயாரிப்புகளில் இதுவரை எம்.ஜி.ஆர். நடித்ததில்லை. எதற்கும் கேட்டுப் பார்க்கலாம்
என்று எம்.ஜி.ஆரி டம் வந்து கேட்டார்கள்.
அவரும் ஒப்புக் கொண்டார்.
படப்பிடிப்பு வேலைகளும் மளமள வென்று ஆரம்பமாகி, நடை பெற ஆரம்பித்தன.
கதையின் பெரும் பகுதி காட்சிகள்
கார்வாரை அடுத்துள்ள கடற்கரையில் படமாக்கப்பட்டன.
தமிழ் நாட்டிலுள்ள கடற்கரைகளை
விட்டு விட்டு,
எண்ணூறு மைலுக்கப்பாலுள்ள கார்வார் கடற்கரையை ஏன் பத்மினி பிக்
சர்சார் தேர்ந்தெடுத்தார்கள்?
இதற்கு கதையைப் பற்றி சிறிது
தெரிந்து கொள்வது அவசியம்.
'ஆயிரத்தில் ஒருவன்'
கதை இரண்டு தீவுகளில் நடை பெறுகிறது. ஒரு தீவு கொள்ளைக்காரர்களுடையது;
மற்றொரு தீவு அடிமைகள் நிறைந்தது.
கரையிலிருந்து பார்த்தாலேயே
இந்தத் தீவுகள் தெரியவேண்டும். தவிர, கடற்கரை ஓரமாக பாய்
மரக் கப்பல்கள் வந்து நிற்க வேண்டும். அதற்கேற்ப ஆழம் பொருந்தியதாக கடற்கரை
அமைந்திருக்க வேண்டும். எல்லா வற்றுக்கும் மேலாக கடற்கரை யில் அடர்ந்த காடுகளும்
சோலைகளும் இருக்க வேண்டும்.
கிழக்குக் கடற்கரையில் விசாகப்பட்டினத்திற்கு
சமீபமாக,
மேற்குக்கரை ஓரம் மங்களூர், கோவா மற்றும் பல
இடங்களைச் சுற்றிப் பார்த்த பின், கார்வார் கடற்கரையே இதற்கு
ஏற்ற தெனத் தீர்மானித்தார்கள். இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்க சுமார் ஐயாயிரம்
மைல்கள் வரை பயணம் செய்ய வேண்டியிருந்தது.
கார்வார் கடற்கரை மூலம்தான்
நம் நாட்டில் உற்பத்தியாகும் இரும்பு தாதுப்பொருள்கள் ஏற்று மதியாகின்றன. இவற்றை
ஏற்றிச் செல்லும் பெரிய பாய்மரக் கப்பல்கள் அங்கே இருக்கின்றன. தவிர, மேற்குக் கடற்கரை ஓரம் உள்ள முக்கிய பட்டினங்களுக்கும் பம் பாய்க்கும்
சாமான்களை ஏற்றிச் செல்ல பல படகுகளும் அடிக்கடி செல்கின்றன.
பத்மினி பிக்சர்சார்
இம்மாதிரியான இரண்டு பெரிய படகுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டார்கள். அவர்கள்
கதைக்கு ஏற்ப இந்த இரண்டு படகுகளும் சிறிது மாற்றி அமைக்கப்பட்டன. ஒன்று நாகரீகமான
கப்பல்;
மேலே தங்கும் அறை உண்டு; மற்றொன்று
அடிமைகளுடையது.
படப்பிடிப்புக்காக
வந்திருந்த எம். ஜி. ஆர்., நம்பியார் ஆகியோர் கார்வாருக்கு
இருபத்திரண்டு மைல் தள்ளியிருந்த பெல ஹிரி விருந்தினர் விடுதியில்
தங்கியிருந்தார்கள். ஸ்டண்டு பார்டியினர் கார்வார் முனிசிபல் ஹாலில் தங்கியிருந்தார்கள்;
மற்றவர்கள் அங்கிருந்த ஓட்டலில் தங்கினார்கள்.
விடியற்காலை நான்கு மணிக்கே
படப்பிடிப்புக்கு தயாராவார்கள். கடலில்,கரைக்கு நூறு அடி
தள்ளி பாய்மரக்கப்பல் இருக்கும். கரையிலிருந்து கப்பலுக்குப் போய்வர சிறு படகுகளை
அமர்த்திக் கொண்டனர். தவிர படகுகளை இணைத்து தெப்பங்களையும் செய்து கொண்டார்கள்.
இதன் மேல் சுமார் நூறு பேர்கள் ஒரே சம யம் வர முடியும். இதன் மூலம் தான் காமிரா,
மற்றும் ஜெனரேட்டர் முதலியவற்றை ஏற்றிச் செல்ல முடிந்தது.
கரையில் ஒரு கோஷ்டி இருக்கும்; கப்பலில் ஓரு கோஷ்டி இருக்கும். கப்பலிலிருந்து டைரக்டர் பந்துலு சொல்வது
கரையிலுள்ள வர்களுக்குக் கேட்காது; இங்கிருந்து சொல்வது
அவருக்குப் புரி யாது. இதற்காக நீராவிப்படகு ஒன்றை கடற்கரைக்கும், கப்பலுக் கும் இடையே அடிக்கடி ஓட்டினார்கள். கப்பலுக்குச் சென்று பந்துலு
சொல்லும் குறிப்புகளை வாங்கிக் கொண்டு இங்கே வரும் அந்தப் படகு. கரையிலுள்ளவர்கள்
அதன் படி தயாராவதற்குள், ஒரு பெரும் காற்று வந்து, அந்தப் பெரிய கப்பலை அப்படியே மறுபுறம் திருப்பி விடும். மறுபடியும்
அடியிலிருந்து எல்லாம் ஆரம்பமாக வேண்டும்!
கடற்கரையை யொட்டி உயரமான
மலைப்பிளவுகள் உண்டு. பிற் பகல் மூன்று அல்லது நான்கு மணிக்கெல்லாம் ஒரு மலையின்
நிழல் மற்றொன்றின் மீது விழுந்து விடும். நிழலில் எப்படிப் படமாக்க முடியும்?
இதனால்தான் இரண்டு வாரங்களில்
படமாக்கி விட்டு வந்து விடலாம் என்று நினைத்துப் போன பத்மினி பிக்சர்சாருக்கு, இந்த அனுபவங்களுக்குப் பின்னர் தான், அப்படி
நினைத்தது எவ்வளவு தவறானது என்ற உண்மையும் தெரிந்தது.
படப்பிடிப்பு முடிந்து, அவரவர் தங்கள் ‘மேக் அப்’பைக் கலைத்து விட்டு, அவர்கள்
இருப்பிடம் போய்ச் சேர இரவு ஏழுமணியாகும். ஆக இம்மாதிரி, விடியற்
காலை முதல் இரவு ஏழு மணி வரை அவர்கள் பணியாற்ற வேண்டியிருந்தது !
எம்.ஜி.ஆர். படத்தின் நாயகன்.
அவரை அடிமைப்படுத்திச் சென்று விடுகிறார்கள். அங்கு அவர் தப்பிக்க ஜெயலலிதா
உதவுகிறார். பின்னர் அவர் கொள்ளையர்கள் வாழும் தீவில் வந்து விடுகிறார்.இங்கே
வரும் அவர், கொள்ளையனாக மாறினாலும், நியாயத்திற்காகவும்
நேர்மைக்காகவும் போராடி, கடைசியில் ஜெயலலிதாவை எதிர்பாராத
வகையில் சந்திக்கிறார்.
இதன் இடையே பல சண்டைகள்
வருகின்றன. நம்பியார், எம்.ஜி. ஆர். இருவரும் பயங்கரமாகப் போரிடும் காட்சிகளும்,ராமதாஸ், எம்.ஜி.ஆர், நம்பியார்,
மற்றும் ஜெயலலிதா, நாகேஷ், மாதவி வரும் பல முக்கியமான காட்சிகளும் இங்கு எடுக்கப் பட்டன.
ஒரு முறை கத்திச் சண்டையின்
போது,
அதில் கலந்து கொண்ட ஸ்டண்ட் பார்டியைச் சேர்ந்தவர் தவறி கடலில் கீழே
விழுந்து விட்டார். இதனால் அவருக்கு காயம் ஏற்படவே, உடனே
அங்கி ருந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது தவிர, மற்றபடி
விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை.
எம். ஜி. ஆர். படப்பிடிப்பு
முடிந்ததும் இருபது மைல் தள்ளி உள்ள விடுதிக்குப் போய் விடுவார். பின்னர்
அங்கிருந்து மீண்டும் புறப் பட்டு வந்து, ஆஸ்பத்திரியிலிருக்கும்
அடிப்பட்டவரை விசாரிப் பார்; தனது பார்டியைச் சேர்ந்தவர்களை
வந்து பார்ப்பார் - வசதி கள் சரியாக இருக்கின்றனவா என்று. ஆக படப்பிடிப்பு
முடிந்து, விடுதிக்குச் சென்று, சற்றும்
சோர்வோ களைப்போ இல்லாமல் தன்னுடன் வந்தவர்களின் நலன்களைப் பற்றி கவனிப்பதில் அவர்
காட்டும் ஈடுபாட்டைக் கண்டு பலர் வியந்து போய் விட்டார்கள்!
அவருடன் வந்திருந்த ஸ்டண்ட்
பார்டியினரும் மிகவும் ஒழுங்காக, கட்டுப்பாடுடன்
இருந்தார்கள். இந்தப் பார்டியிலேயே, வேறொரு கோஷ்டியைச்
சேர்ந்த சிலரும் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் குடித்து விட்டார் என்பதறிந்த
எம். ஜி. ஆர். ''உடனே அந்தக் கோஷ்டியைத் திருப்பி அனுப்பி
விடவேண்டும்'' என்று சொல்லி விட்டார். “ஒருவர் செய்த தவறுக்காக,
அவருடன் வந்தவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்'' என்று எடுத்துச் சொன்ன போது, சமாதானமடைந்த அவர்,
தவறு செய்த வரை மட்டும் உடனே திருப்பி அனுப்பிவிடச் சொல்லி
விட்டார்!
ஒழுக்கத்தின் எல்லையில்
இருந்தது அவரது கோஷ்டி!
தவிர, ஓட்டலில் அவர் தங்கியிருந்தபோது தனது சென்னை காரியாலயங்களுடன் செய்த
போன்களுக்கான செலவு, தனது பெட்டி படுக்கைகளை எடுத்து வந்த
வகையில் . ஏற்பட்ட - கூலிச் செலவு இவற்றையெல்லாம் கூட, நிர்பந்தமாக,
வலிய முன்வந்து "இது என் சொந்த செலவு;
நான் தான் தருவேன்'' என்று சொல்லி தந்து விட்டார்!
கார்வாரில் ஏராளமான 'தமிழ் மக்கள் கூலி வேலை செய்து
பிழைக்கிறார்கள். படப்பிடிப்புக்குத் தேவையான துணை நடிகர்களை அவர்களிடையிருந்தே
எடுத்துக் கொள்ள முடிந்தது.
கார்வாரிலிருந்து புறப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்பாக எம். ஜி. ஆருக்கு கார்வார் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு வர வேற்பு அளித்தார்கள்.
எம். ஜி. ஆர்.
அங்குள்ளவர்களின் பிரித்தாளும் கொள்கையைத் தெரிந்து கொண்டு, 'நம்மவர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் உயர்வடையலாம்'' என்று
அறிவுரை வழங்கினார். புறப்படுவதற்கு முன்பாக துணை நடிகர்களாக தன்னுடன் வந்து
நடித்த கார்வார் தமிழ் கூலிகள் ஐம்பது பேருக்கு துணி மணிகளும் எம். ஜி. ஆர்.
வாங்கிக் கொடுத்தார். இவற்றை அவர்கள் சற்றும் எதிர் பார்க்காததால் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
எம். ஜி. ஆருடன் வெளிப்புறக்
காட்சிக்காகப் புறப்படுவதற்கு முன்பாகவே இங்கிருந்த சிலர், ‘எம். ஜி. ஆர். நீண்ட நாட்கள் வெளிப்புறக் காட்சிக்காகத் தங்கமாட்டார்.
அவர் அப்படித்தான் சொல்வாரே தவிர, அங்கு போன பின், இதை ஸ்டூடியோவிலேயே எடுத்துக் கொள்ளலாம்; இதை
சென்னையிலே படம் பிடிக்கலாம் என்று சொல்லி, தட்டிக் கழித்து ,
விரைவில் வந்து விடுவார் பாருங்ளேன்!'' என்று
சித்ரா கிருஷ்ணசாமியிடம் சொன்னார்கள். இவர்கள் எல்லாருமே எம்.ஜி.ஆரை வைத்துப் படம்
எடுப்பவர்கள்; எடுத்தவர்கள். இவர்கள் சொல்வதையும் அவரால்
புறக்கணிக்க முடியவில்லை. ஆனால் கார்வாருக்குச் சென்றதும் தான் இவை அப்படியே
முரணானவை என்பது தெரிந்தது.
இதுபற்றி எம்.ஜி.ஆரிடமே
கேட்கப்பட்டது. அவர் அதற்குப் பதிலும் சொன்னார்.
“வெளிப்புறக் காட்சி என்று படம் பிடிக்க வரும்போது, நம் ஸ்டூடியோவிலோ, அல்லது நமக்கு சமீபமாகவோ இல்லாத காட்சி களாக இருந்தால் பரவாயில்லை. ஆயிரம் மைல்கள் வந்துவிட்டு, இங்கிருக்கும் சோலையிலோ, அல்லது வெறும் கடற்கரையிலோ படமாக்குவதில் என்ன புதுமை இருக்கப்போகிறது? இதைச் சென்னையிலேயே படமாக்கலாமே ! உதாரணமாக கல்கத்தாவின் சூழ்நிலையில் கதை இருக்கிறது என்றால் கல்கத்தாவில் தான் படமாக்கவேண்டும்; கல்கத்தாவின் வீட்டில் நடப்பதாகச் சொல் லப்படும் கதையை, சென்னையிலேயே எடுக்கலாமே! இதைத் தான் நான் சொல்கிறேன்.
ஆனால் உங்கள் விஷயம் வேறு.
இங்கே உள்ள கடற்கரையைப் போல வேறு கடற்கரை கிடையாது; இங்குள்ளது போன்ற படகுகளை வேறு எங்கும் கொண்டு போக முடியாது. எனவே கதைக்குப்
பொருத்தமாக உள்ள இந்தச் சூழ்நிலையில் படமாக்கினால்தான் நன்றாக இருக்கும்.
இம்மாதிரியான ஒரு இடத்தை நீங்கள் தேர்ந்து எடுத்து விட்ட பின், நான் எப்படி மறுக்க முடியும்?'' என்றார் எம்.ஜி.ஆர்.
அவர் சொல்வதில் எவ்வளவு' உண்மைகள் இருக்கின்றன!
பத்மினி பிக்சர்ஸ்
திட்டப்படி எல்லாம் சிறப்பாக முடிந்தாலும், அவர்களால்
ஒரு பாட்டை படம் பிடிக்க முடியவில்லை!
ஆக நாற்பத்தைந்து நாட்கள்
கார்வாரில் தங்கியிருந்து சுமார் நாற்பதாயிரம் அடிகள் வரை படம் எடுத்தார்கள். இது படத்தில்
ஐந்து அல்லது ஆராயிரம் அடிகள்தான் வரும். ஆயினும் தமிழ்ப் படவுலகுக்கு முற்றிலும்
புதுமையாக இருக்கப்போகும் இந்தக் காட்சிகளின் சிறப்பை எண்ணும் போது அவர்கள் பட்ட
கஷ்டங்களுக்கு ஏற்ற பலனே அடைந்திருப்பதாக நினைக்கிறார் கள்.
இந்தக் காட்சிகளுக்காக ஐந்து
லக்ஷங்கள் செலவழித்ததைப் பற்றி பத்மினி பிக்சர்சார் பெரிதாக நினைக்கவில்லை.
தமிழ்ப்பட ரசிகர்களுக்கு
புதுமை விருந்து அளிக்க வேண்டும் என்ற அவர்கள் லக்ஷியத்தையே பெரிதாக
நினைக்கிறார்கள்.
- பேசும் படம் மலர்
(ஏப்ரல் மதம் ) 1965
Pradeep sir, super.
ReplyDelete