படத்தின்
உயிர்நாடி எடிட்டிங் (வெட்டி
ஒட்டி இணைத்தல்) கதை, வசனம், பாடல்கள், நடிப்பு, காட்சி
சோடனைகள் மற்றும் எல்லாம் எவ்வளவுதான் திறம்பட இருந்தாலும் எடிட்டிங் சரிவரச்
செய்யாமற் போனால் படத்தின் தோல்வி நிச்சயமாகி விடும். ஆரம்பத்தில்
திரு. ஆறுமுகம் என்பவர் இருந்தார். அவர்
சில காரணத்தால் விலகினார். அதன்
பிறகு திரு. பெருமாள் அந்தப் பொறுப்பை ஏற்றார். படத்தின்
முடிவு நேரத்தில் அவரால் வேலை செய்ய முடியாமற் போன காரணத்தால் வேறொருவர் துணைக்கு
நியமிக்கப்பட்டார். அவரும் அதில் தோல்வியுறவே, கடைசியாக
வண்ணப்பகுதிகளில் பெரும் பகுதியை "எடிட்" செய்து கொடுக்கும் பொறுப்பைத் திரு. ஜம்பு
அவர்கள் ஏற்றார். அவருடைய விருப்பத்தின்படியும்
வற்புறுத்தலின் படியும் தான் அவருடைய பெயரைப் படத்தில் வெளியிடவில்லை.
திரு. ஜம்பு
அவர்கள் கடைசி நேரத்தில் செய்த பணிக்கும் அவருடைய நேர்மைக்கும் கிடைத்த
பெருவெற்றியாகுமிது. இந்தக் காலத்தில் யாரும்
செய்யாததியாகத்தைச் செய்து "தொகுப்பவர்"களின் ஒற்றுமைக்கும், "கடமை பெரிது; விளம்பரமல்ல' என்பதற்கும்
வெற்றி தேடித்தந்தவர் திரு.ஜம்பு
அவர்கள்.
அடுத்தது
படப்பிடிப்பு நிர்வாகம். திரு. கோவிந்தராசன்
ஒரு அதிசய மனிதர். கடவுளைப் பற்றிச் சொல்லும் போது, திருடனும்
கடவுளைக் குறைகூறுகிறான், "எங்களைக்
காப்பாற்றவில்லையே, காவலாளியிடம் காட்டிக்
கொடுத்துவிட்டாயே' என்று....
காவலனும்
குறை கூறுவான், "கள்ளனைக் காப்பாற்றி என்னைக்
கைவிட்டு விட்டாயே' என்று.....
அதுபோலப்
படத்தயாரிப்பு நிர்வாகியை அலுவலகப் பையன் முதல் பட உரிமையாளர் வரை கோபித்துக் கொள்வார்கள்
- குறை கூறுவார்கள்.
புத்தர்
துறவு பூண்டதே படத் தயாரிப்பு நிர்வாகியாக இருந்ததினால் தான் என்று கூட வேடிக்கையாகச்
சொல்வதுண்டு.
அவ்வளவு
கடினமான வேலை எங்கு திரும்பினாலும் குற்றச்சாட்டுகள் தான் இருக்கும். சமயத்திற்கு
நடிகர்களை அழைத்து வரவில்லை - ஒப்பனையாளர்
எங்கே? - சோடனைகள் சரியாக இல்லை - எங்கே
கோவிந்தராஜ்.... எதற்கெடுத்தாலும் யார்
எந்தத் தவறு செய்தாலும் பொறுப்பேற்றுப் பதில் சொல்லவேண்டியவர் கோவிந்தராஜ்.... எத்தனையோ குற்றச்சாட்டுகள் ! இவைகளையெல்லாம், சிறிதுகூடப்
பொருட்படுத்தாமல் கடைசி வரை வேலை செய்து (காரோட்டியாகவும்
கூடச் சில சமயம் தானே பணியாற்றி), படத்தை
முடிப்பதற்குத்துணை செய்தார். ஆம்; படத்தை
நல்ல முறையில் முடிப்பதிலே வெற்றி பெற்றார். இடிந்துவிழும்
காட்சிகளில் சில இவரால் நிர்மாணிக்கப் பட்டன என்றால் திகைக்க வேண்டி வருமல்லவா?
இவருக்கு
உறுதுணையாக இருந்தவர் திரு. பத்மனாபன்
என்பவர், இவர் எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின்
தலைமை மின்சார அமைப்பாளர் ஆவார். கலைவாணர்
அவர்களுடைய அன்புக்குப் பாத்திரமானவர்.
இவர்
கார் ஓட்டக் கற்றுக்கொண்டார் என்றறிந்து போது அதன் காரணம் எனக்குப் புரியாத
புதிராகவே இருந்தது. "நாடோடி மன்னன்'' படம்
எடுக்க ஆரம்பித்த பிறகுதான் அது புரிந்தது - படப்பிடிப்பு
ஒழுங்காகச் சரிவர நிறைவேறு வதற்காக அவர் கற்றுக் கொண்டார் போலும் என்று; இவர்
எப்போது தூங்கினார், எப்போது சாப்பிட்டார், எப்போது
குளித்தார், எப்போது உடைகளை மாற்றினார் என்பதே
யாருக்கும் தெரியாது. ஆனால்
எப்போதும் எங்கும் பத்மநாபனைக் காணலாம். சோர்வோ, சலிப்போ
எதுவுமே அணுகவிடாத ஒரு தனிப்பெரும் சக்தி படைத்த தொழிலாளியாக - கலைஞானக்
காரியம் ஒழுங்காக நிறைவேறுவதில் உரிமையாளனாக நடந்து, தான்
தலைமை மின்சாரத் தொழிலாளி மட்டுமல்ல - திறமைமிக்க
நிர்வாகியாகவும் கூட இருக்க முடியும் என்பதை நிறைவேற்றி வெற்றி பெற்றவர் திரு.பத்மநாபன்
என்று சொல்வது பொருதமல்லவா?
இன்னொருவர்
திரு.கே.என்.குஞ்சப்பன்
அவர்கள். இவர் என் தமையனார் எம்.ஜி.சக்கரபாணி
அவர்களுடைய மைத்துனர் ஆவார். இவரும்
எங்களுடன் சிறு வயது முதல் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பணியாற்றியவர். இவரைப்பற்றி
அதிகம் எழுத விரும்பாத காரணத்தால் எழுதவில்லை .
காட்சி
சோடனைகளை நிர்மாணிக்கும் பொறுப்பைத் திரு.நாகேசுவரராவ்
அவர்கள் ஏற்றிருந்தார். அவருடைய
அக்கறைமிக்க, அனுபவமிக்க கலைத்திறமை மிகவும் பயன்
பட்டது. படத்தின் தரம் உயர்வாக இருக்கிறது
என்று சொன்னால் அதற்குத் திரு.நாகேசுவரராவும்
ஒரு காரணம் என்பது ஒன்றே அவர்கள் திறமைக்கு வெற்றி என்று தானே பொருள்...?
ஒப்பனையாளர்
திரு. இராமதாஸ் அவர்கள் திரு. அரிபாபு
அவர்களின் சீடன் என்று தன்னைக்கூறிக்கொள்பவர்; சில
வருடங்கள் அவருடன் பணியாற்றி அனுபவம்; பெற்றவர்; எனது
சிறுவயது முதல், என்னுடன் பழகியவர், நாங்கள்
இருவரும் "மதுரை ஒரிஜினல் பாய்ஸ்
கம்பெனி "யில் ஒன்றாக நடித்தவர்கள். தென்னிந்திய
நடிகர் சங்கப் பத்திரிகையான "நடிகன்
குரலில்" எனது வாழ்க்கைப் பாதைப்
பகுதியில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிரூந்தாலும் இனியும் குறிப்பிட இருப்பதாலும்
அதைப்பற்றி இங்கு எழுத வில்லை .
இவர்
ஆங்கிலக் கல்வியறிவு பெறாதவர்; எந்தப்
புத்தகத்தையும் படித்து இக்கலையைக் கற்றவர் அல்ல.
அனுபவத்தினால்
மட்டுமே தெரிந்தவர். அவர் பத்திரிகைகள் புகழுமளவிற்குத்
தனது பொறுப்பை நிறைவேற்றி வெற்றி பெற்றார் என்று ஏன் கூறக் கூடாது?...
இவருக்குத்
துணையாக இருந்தவர் முத்து என்பவர. எம்.ஜி.ஆர்
நாடக மன்றத்தின் ஒப்பனையாளர், அப்படியிருந்தும், தனக்கு
முதன்மை ஸ்தானம் படத்திலே தரவில்லையே என்று எண்ணாத நல்ல உள்ளம் படைத்தவர்; இன்னும்
கற்றுக்கொள்ள வேண்டியவை பல உண்டு என்ற எண்ணம் கொண்டவர். அவர்
வெறும் கலைஞன் மட்டுமல்ல; நாட்டுப்பற்றும்
மிக்கவர். நான் அரசியலாரால் கைது செய்யப்பட்டு
மத்திய சிறைக் கோட்டத்தில், சிறை
அதிகாரியின் முன் அழைத்துச் செல்லப்பட்டேன். கே.ஆர்.ஆர். எஸ்.எஸ்.ஆர்.., டி.வி.என். முதலிய
நண்பர்களுடன் பலர் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள்
எங்களைப் பார்த்தவுடன் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அவர்களுக்கு
வணக்கம் செய்தோம். அவர்களில் ஒருவர் தன்னைன
மறைத்துக்கொள்ள முயன்றார். கவனித்தேன். மேலே
குறிப்பிட்ட ஒப்பளையாளர்தான் அவர்...
அவர்
கலப்பு மணம் செய்தவர் ஒழக்கமாக வாழ்பவர்; தன்னடக்கமானவர்; தொழிலில்
மிக்க அக்கறை காண்பிப்பவர். இவர்
படப்பிடிப்பில் ஒத்துழைத்து ஒப்பனைக்குப் பாராட்டுக் கிடைக்க உழைத்தவர். விளம்பரமடையாத
இவரும் பாராட்டப்படுவது துணைத் தொழிலாளர்களுக்கு வெற்றி யென்றுதானே பொருள்?
தலையலங்காரம்
செய்த திரு. இரங்கசாமி "மர்மயோகி' படத்தில்
எனக்குத் தலை முடியைச் சுருட்டி ஒழுங்குப்படத்தியவர். சமீப
காலமாக மீண்டும் நான் நடிக்கும் படங்களில் அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அவர்
புல்லாங்குழல் வாசிக்கப் பழகிப் பிறகு இந்தத் தொழிலுக்கு வந்திருப்பவர் மிகக்
கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து கொண்டிருப்பவர்; தலை
முடியை (டோப்பா என்றும் விக் என்றும்
சொல்லுவார்கள்) அவரவர் முகத்திற்கு ஏற்றாற் போல்
அமைத்தக் கொடுப்பதில் நிபுணர், நல்லவர். எனது
மேக்-அப்பில் நல்ல மாற்றத்தை காணும்படி
செய்தது இவருடைய தலையலங்காரத்தினால் தான்.
நாடோடி
மன்னன் இவ்விருவரின் வெவ்வேறு தோற்றத்திற்கு ஏற்றார் போலவும், இருவரும்
ஒரே மாதிரி தோன்றும் போதும் இவர் அமைத்துக் கொடுத்த தலையலங்காரம்
போற்றுதற்குரியதாகும். இந்த
இளைஞர் தனது உழைப்பால் உயருபவர். தனது
தனித் தன்மை வாய்ந்த திறமையால் நல்ல ஒரு மைதானத்தை எய்தும் இவர் இந்தப் படத்தின்
மூலம் வெற்றிப் பாதையை அடைந்திருக்கிறார் என்று உறுதியாகக் கூறலாம்.
உடை
அலங்காரம், பாத்திரங்களின் தன்மையையும்
தகுதியையும் எடுத்துக் காட்டப் பெரிதும் உதவுவதாகும். திரு.பிரான்ஸிஸ்
எண்டவர் வாலிபர்; வயது அதிகமாகதவர் -அதிக
விளம்பரம் பெறாதவர்; ஆனால் நல்ல உழைப்பாளி; ஆர்வமிக்கவர். ஆங்கில
பாணியில் அவர் தைக்கும் உடைகள் மிகக் கவர்ச்சிகரமாயிருக்கும்.
நாம்
எவ்வளவு அவசரப்பட்டாலும், ஆத்திரப்பட்டாலும்
அவர் நிதானமாகவே பேசுபவர் - காரியத்தைச்
செய்வார்.
இது
அலட்சியத்தாலல்ல; செய்கிற காரியத்தைச் சரிவரச் செய்ய
வேண்டுமே என்ற ஆசை....? “நடோடி
மன்னனில் உடை அலங்காரங்கள் பொருதமாக இருக்கின்றன; பிரமாதமாக
இருக்கின்றன" என்று போற்றப்படுவது திரு. பிரான்ஸிஸ்ஸினுடைய
தொழில் திறமைக்குப் பெரும் வெற்றி யென்றுதானே சொல்ல வேண்டும்.
இவருக்கு
உடன் இருந்து உதவி செய்தவர் இராசையா என்பவர். இவர்
எம்.ஜி.ஆர். நாடகமன்ற
உடை அலங்காரப் பகுதியில் பணியாற்றுகிறவர். துவக்கத்திலிருந்து
ஒவ்வொரு காரியத்தையும் தனதாக எண்ணிக் கண்ணுங்கருத்துமாக கவனித்து உழைத்தவர்.
அவருக்கு
சினிமா அனுபவம் புதிது. முழுப்படத்திலும்
பொறுப்பேற்றுச் செயலாற்றியது இதுவே முதன் முறை. அந்த
நிலையில் திரு. பிரான்ஸிஸ்ஸிற்கு மிகமிக ஆதரவாக
இருந்து உடை அலங்காரப் பகுதிக்குப் பெருமை தேடித் தந்த திரு. இராசையா
உழைப்பாளர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருந்து, தன்னுடைய
பொறுமைக்கு வெற்றி தேடிக்கொண்டார் என்று நிச்சயமாகச் சொல்லலாமே.
தொடரும்.....
Comments
Post a Comment