அழைத்தது “அன்பே வா” || Part 02 ||









கால்ப் விளையாட்டு வீரராக அவர் வரும் காட்சிகளும்டிஆர்ராமச்சந்திரன்முத்து லட்சுமிசரோஜாதேவி ஆகியோரைச் சந்திக்கும் காட்சிகளும் பட மாக்கப்பட்டன.







குதிரை மீது டி.ஆர்.ஆரும் சரோஜாதேவியும் வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து சற்று பின்னால் முத்துலக்ஷ்மி வருகிறார். டி. ஆர். ஆரின் குதிரைக்கு இருந்தாற்போலிருந்து ரோஷம் வந்து விடுகிறது. ஆமை வேகத்தில் வந்து கொண்டிருந்த அது, திடீரென குதிரை வேகத்தில் ஓட ஆரம்பிக்கிறது! அதைக் கண்டு முத்துலஷ்மி பதறுகிறார்.

டி.ஆர்.ஆர். நீண்டகால இடைவெளிக்குப் பிறகு அன்றுதான் மீண்டும் குதிரை சவாரி செய்கிறார். இதற்கு முன் ஆர். பத்மநான் படத்தில் குதிரைச்சவாரி காட்சியில் நடித்திருக்கிறார்.

படப்பிடிப்புக்காக அவருக்கு சில மணி நேரம் குதிரைச் சவாரி ஒத்திகையும் தரப்பட்டது.

ஒத்திகையின் போதெல்லாம் சரியாக வந்த குதிரை, காட்சி படமாக்கப்பட்ட போது, ஒழுங்காக வர மறுத்து விட்டது!

என்னடா இது குருதையாக இருக்கே! குதிரை மாதிரி இல்லையே? என்று டி.ஆர்.ஆர். முனகிக் கொண்டிருந்த போது தான், படப்பிடிப்பைக் காண சுற்றிலும் நின்றிருந்த நூற்றுக் கணக்கான மக்களிடையே இருந்து கரகோஷம் எழுந்தது! மக்கள் திலகம்' தான் வந்து கொண்டிருந்தார்!

வந்தவர் விஷயத்தைக் கேட்டதும் டி.ஆர்.ஆரிடம் சென்றார். எனக்குத் தெரிந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன் ..... என்று குதிரை ஓட்டுவதில் உள்ள சில நுணுக்கங்களையும், காலை பக்க வாட்டில் எப்படித் தட்ட வேண்டு மென்பதையும் டி. ஆர். ஆருக்கு சொல்லிக் கொடுத்தார். பின்னர் அந்தக் காட்சி சரிவர அமைந்தது என்பதை நான் சொல்ல வேண்டுமா என்ன?

க்கள் திலகம்' இங்கு வந்த மறு நாள் அவரை, அவர் தங்கியிருந்த 'சுதர்சனம்' மாளிகையில் சந்திக்க, டைரக்டர், தயாரிப்பாளர்கள், அசோகன் ஆகியோருடன் நானும் போயிருந்தேன்.

அப்போதுதான் தேகப் பயிற்சி செய்து முடித்திருந்தார் எம்.ஜி.ஆர். எங்களையெல்லாம் ஒருங்கே எதிர்பாராத நேரத்தில் கண்ட எம்.ஜி. ஆருக்கு ஒரே மகிழ்ச்சி . உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

உங்களுக்கெல்லாம் கொடுப்பதற்கு இங்கு தயாராக எதுவு மில்லையே என்று சொன்னவாறே, உள்ளே போனவர் கையில் ஒரு பொட்டலத்துடன் வந்தார்.

அது பேரிச்சம்பழப் பொட்டலம்.

அதைப் பிரித்து, ஒவ்வொருவரிடமாகச் சென்று கொடுத்து வந்தார் எம்.ஜி.ஆர்.

பேரிச்சம்பழம் கொடுத்து உப சரிப்பதென்பது ஒரு பண்பட்ட பழைய பழக்கம் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்?

எம்.ஜி.ஆர். மனதைத் திறந்து அன்று சில விஷயங்களைச் சொன் னார்.

நண்பர்கள் என்பவர்கள் வெறும் நண்பர்களாகப் பழகக் கூடாது. நல்லதை நல்லதென்றும், கெட்டதைக் கெட்டதென்றும் சொல்லும் குணமும் கொண்டிருக்க வேண்டும்'' என்றெல்லாம் சொன்னார் எம். ஜி.ஆர்.

பின்னர் பொழுது போக்கு பற்றிப் பேச்சுத் திரும்பியதும், சீட்டாட்டத்தில் தலைகாணிதூக்கும் பந்தயத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

அவர், நம்பியார் மற்றும் நண்பர்கள் சீட்டாடும் போது, பணம் வைத்து ஆட ஆரம்பித்தார்கள். ஆனால் அது நாளடைவில் தீயது என்று படவே, ஆட்டத்தில் தோற்பவர்கள் தலைகாணியை சிறு நேரம் தூக்கிக் கொண்டிருந்தால் போதும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

இம்மாதிரி தலைகாணி தூக்கியவர்களை படம் பிடித்து வைத்து விடுவோம்!'' என்று எம்.ஜி.ஆர். சொன்னார்.

மாலை நேரங்களில், வேறு அலுவல்கள் எதுவுமில்லாமல் இருந் தால் எம்.ஜி.ஆர். எங்கள் இருப் பிடத்திற்கு வந்து விடுவார். சீட்டாட்டம் துவங்கி விடும்.

எம்.ஜி.ஆர்., டி.ஆர்.ஆர். முருகன், குமரன், உதவி டைரக்டர் ராஜேந்திரன், முருகனின் காரிய தரிசி ராமனாதன் இப்படி ஒரு கோஷ்டி அமைந்து விடும்.

எம்.ஜி.ஆர். வரும் வரை நான் ஆடிக் கொண்டிருப்பேன். வந்ததும் அவரிடம் என் சீட்டுகளைக் கொடுத்து விடுவேன். என்னை தலைகாணி தூக்க வைப்பதிலிருந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் தான்! அந்த நம்பிக்கையும் வீண் போகவில்லை.

ஏன், நாங்கள் இந்த அடிப்படையில் ஆட ஆரம்பித்தலிருந்து ஒரு நாளாவது யாரும் தலைகாணி தூக்கவில்லை. ஏனெளில் எங்களில் யாரேனும் தோற்பதுக்குள் நேரம் போய் விடும்!

ஊட்டியின் உச்சியிலுள்ள கால்ப் கிளப்பில் அன்பே வா என்ற பாட்டின் சில அடிகளும், அதற்கு முன் தினம் இதே இடத்தில் சரோஜாதேவி தன் சகாக்களுடன், கதாநாயகனை விரட்டத் திட்டமிடும் காட்சிகளும், கதாநாயகன். தன் கட்டை விரலை நிமிர்த்தி தன் வலிமையை மறை முகமாக எடுத்துச் சொல்வது போன்ற காட்சிகளும் எடுக்கப்பட்டன.

முதல் நாள் வெய்யில் நீண்ட நேரம் வரை தலை காட்டவே இல்லை. இந்த இடை வேளையில் நடனப் பெண்களும், ஆண்களும் நடனமாடுவார்கள் என்று ஒருவர் யோசனை தெரிவித்தார். சிறப்பாக ஆடுபவருக்கு நூறு ரூபாய் பரிசு தருவேன் என்றார் எம்.ஜி.ஆர். சலீம் - தாரா டுவஸட் நடனம் ஆடினார்கள். சந்திரன் விகடக்கச்சேரி செய்தார். புலியூர் சரோஜா நடனமாடியதுடன், கதாகாலக்ஷேபமும் செய்தார்.

எம்.ஜி.ஆருக்கு அன்று நல்ல செலவு! சிறப்பாக ஆடுபவருக்குப் பரிசு என்று சொன்னவர், ஆட்டத்தில் முக்கிய பங்கெடுத்துக் கொண்ட ஒவ்வொருவருக்கும் நூறு ரூபாயும், உதவியாக வந்தவர்களுக்கு தலா ஐம்பது ரூபாயுமாக அறு நூறு ரூபாய் வரை பரிசாகக் கொடுக்கார்!

இங்கு நவநகர் மகாராஜாவுக்கு சொந்தமான பெரிய அரண்மனை ஒன்று மலை உச்சியில் இருக் கிறது.

கதாநாயகன் ஜே.பி.யின் மாளிகையாக இதை வைத்துக் கொண்டு, பல காட்சிகளை எடுத்தார்கள்.

கதாநாயகன் ஜே.பி.தான் அந்த மாளிகையின் உரிமையாளர் என்பது கதாநாயகிக்குத் தெரியாது. அவளது பெற்றோர்களுக்கும் தெரியாது. தவிர, அவன் ஊரில் இல்லாத சமயம் அதை வாடகைக்கு விட்டு விடும் ஜே.பி.யின் அந்தரங்க வேலையாட்களுக் கும் அவர் திடுதிப்பென்று வந்து விடுவார் என்பது தெரியாது!

எல்லாரும் திகைத்தபடி நிற்க ஜே .பி .வந்து விடுகிறார்.

அவரைக் கண்டதும் அவரது வேலையாட்களான நாகேஷ், மனோரமா, பி.டி. சம்பந்தம், பாக்கியம் எல்லாரும் காரின் முன்னாலேயே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார்கள்.

இந்தக் காட்சிக்கான ஒத்திகை பார்க்கப்பட்டது. அது சரியாக இருக்கிறது என்று சொன்ன பிறகும், தரையில் குப்புறப் படுத்த நாகேஷ் எழுந்திருக்கவே இல்லை! “பூமி இப்பத்தான் சுட ஆரம்பிச்சி ருக்கு. குளிருக்கு பாடிக்கு ஒத்தடம் கொடுப்பது போல எவ்வளவு இதமாக இருக்கிறது தெரியுமா! என்று நாகேஷ், தான் உடனடியாக எழுந்திருக்காதற்கு விளக்கம் சொன்னபோது தன், உண்மையே புரிந்தது.

இதே இடத்தில் பையன்களும், பெண்களும், டி. ஆர். ஆரையும் முத்துலட்சுமியையும் ஏமாற்றி விட்டு, பஸ்ஸில் பிக்னிக் கிளம்புவது, ஜே.பி.யை ஒதுக்கி விட நினைத்தும், அவர் சாமர்த்தியமாக இந்தப் பிரயாணத்தில் ஒட்டிக் கொள்வது, மற்றும் எம்.ஜி.ஆர். கார் ஓட்ட, அசோகனும், சரோஜாதேவியும் வெளியே நைட் கிளப்புக்குப் புறப்படுவது, தவிர மாதவி, ராமாவ், சரோஜாதேவி சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். கார் ஓட்டும் காட்சி இரவு எட்டு மணி சுமாருக்குப் பிடிக்கப் பட்டது.

நடுக்கும் குளிரில் , சில்லென்ற காற்று வீச இந்தக் காட்சிப் பட மாக்கப்பட்டது !

இந்த மாளிகையில் நடை பெற்ற படப்பிடிப்பின் போதும் ஒரு நாள் சூரியன் ஒத்துழைக்கவில்லை! அந்தச் சமயத்தை நடனப் பெண் களும், ஆண்களும் பயன்படுத்திக் கொண்டார்கள். படத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாண்ட் கோஷ்டி இசையை முழக்க, அவர்கள் டுவிஸ்ட் ஆட ஆரம்பித்து விட்டார்கள். மாதவியும் அவர்களுடன் சர்ந்து டுவிஸ்ட் ஆடினார். சிறிது நேரத்திற்கெல்லாம் நாகேஷும் இவர்கள்ளோடு சேர்ந்து கொண்டு ஆட ஆரம்பித்து விட்டார். தவிர, அவ்வப்போது பல தமாஷ் வெடிகளையும் உதிர்த்துக் கொண்டே இருந்தார் நாகேஷ்!



இங்குள்ள போட்கிளப்பை ஓட்டிய யுகலிப்டஸ் தோட்டத்தில் நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்'' என்று எம்.ஜி.ஆர்.,  சரோஜாதேவி பாடும் பாட்டின் சில காட்சிகள் எடுக்கப் பட்டன. இதற்காக காலை ஐந்து மணிக்கெல்லாம் ஒரு காட்சி படமாக்கப்பட வேண்டியிருந்தது. உடல் நலம் சரியில்லாமல் காய்ச்சலுடன் இருந்தும் சரோஜாதேவி, அந்த விடியற்காலை நேரத்தில் நடுக்கும் குளிரில் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்!

'அன்பே வா' படத்தில் கார்னிவல் காட்சி ஒன்று வருகிறது. இதற்காக இங்குள்ள கால்ம் கிரவுண்டில் சிறு கூடாரங்களைப் போட வேண்டியிருந்ததுடன், மற்றும் பல அலங்காரங்களையும் செய்ய வேண்டியிருந்தது. இதற்காக படத்தின் ஆர்ட் டைரக்டர் ஏ. கே. சேகரும், மற்றும் தயாரிப்பு சிப்பந்திகளும் இரவு பூராவும் பனியிலே உழைத்து, இவற்றை திர்மாணித்து, மறுநாள் திட்டமிட்டபடி இங்கு படப்பிடிப்பு நடைபெற உதவினார்கள்.

எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, மற்றும் பல ஆண்களும், பெண்களும் இந்தக் கார்னிவல் காட்சியில் பங்கெடுத்துக் கொண்டார்கள்! படத்தில் அசோகனை ரயில்வே ஸ்டேஷனில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, டி. ஆர். ஆர்., மாதவி, முத்துலட்சுமி எல்லாரும் வரவேற்கிறார்கள். லவ்டேல் ஸ்டேஷனில் இந்தக் காட்சி பட மாக்கப்பட்டது.

சென்னை சர்க்காருக்கு சொந்தமான தமிழகம் மாளிகையின் பரந்த புல்வெளியிலும் பல காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதற்கிடையில் சரஸ்வதி பூஜை அன்று ஏவி.எம். கலைக்கூடச் சிப்பந்திகள் தங்கியிருந்த லாட்ஜில் ஒரூ கலை நிகழ்ச்சியும் நடை பெற்றது.

உதவி டைரக்டர் மூர்த்தி ஒதெல்லோவாக வந்து முதற் பரிசான ரூபாய் நூறைத் தட்டிக் கொண்டு போனார். புரொடக்க்ஷன் இலாகாவைச் சேர்ந்த அடைக்கலம் பெண் வேஷம் போட்டுக் கொண்டு வந்து, பார்வையாளர்களிடையே ஒரு பெரிய பரப்பரப் பையும் உண்டு பண்ணிவிட்டு, மூன்றாவது பரிசாக ரூபாய் ஐம்பதை வாங்கிக் கொண்டு போனார்.

இரண்டாவது பரிசு பாண்டியன், ஜானகி இருவருக்குப் போய்ச் சேர்ந்தது. இவை தவிர எமன் ஏமாந்தான்!" என்ற ஓரங்க நாடகத்தை ராமராவ் குழுவினர் டித்து காட்டினார்கள். மாதவி டுவிஸ்ட் ஆடி, மகிழ்வித்தார்.

நடனக் கோஷ்டியைச் சேர்ந்தவர்களுக்கும் இம்மாதிரி பரிசளிக் கப்பட்டது.

விழாவில் சரோஜாதேவி, டி.ஆர்.ஆர்., எம். சரவணன், மாரு திராவ், முத்துலக்ஷ்மி, .கே. சேகர் ஆகியோர் நீதிபதிகளாக இருந்தா, பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஏவி.எம். மின் சார்பில் முருகன் பரிசுகளை வழங்கினார்.

 அன்பே வா படத்தின் இந்த வெளிப்புறக் காட்சிகளைப் பட மாக்குவதற்காக சுமார் இரண்டு மாத காலம் இங்கு ஏவி. எம். கலைக் கூடத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்தார்கள். எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, டி. ஆர். ஆர் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் சுமார் ஒரு மாத காலம் வரை இங்கு முகாமிட்டு, தங்கள் பகுதிகளில் நடித்து முடித்து விட்டுத் திரும்பினார்கள்.

இங்கே இவர்கள் எல்லாரும் தங்கியிருந்தபோது ஒரே குடும்பத் தினரைப்போலலே பழகினார்கள். சென்னையில் இல்லையே என்ற குறை இங்கு தோன்றவேயில்ல. ஏனெனில் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் பெரும்பாலும் நாங்களே தங்கியிருந்ததால் சென்னையில் இருப்பது போன்ற பிரமையே எங்களுக்கு இருந்தது!

ஊட்டிக்கு வந்ததும், இந்தச் சமயமாகப் பார்த்து வந்திருக்க றீர்களே!'' என்று பீதி உண்டாக்கியவர்களின் சொற்கள் பொய்யாகும் வண்ணம், முதல் ஓரிரு நாட்தள் தவிர, மற்ற நாட்கள் பூராவும் வெய்யில் காய்ந்து தள்ளி விட்டது!

கலைஞர்களின் ஒத்துழைப்பினாறும், கதிரவனின் ஒத்துழைப்பினா லும், ஊட்டி மக்களின் கட்டுப் பாடான ஒழுக்கத்தினாலும், மற்றும் இங்குள்ள பல அதிகாரிகளின் உதவியினாலும் பல காட்சிகளை இங்கு குறுகிய காலத்தில், திட்டமிட்டபடி எடுத்து முடிக்க முடிந்தது.

 இவர்களுக்கெல்லாம் தயாரிப்பாளர்களான முருகன், குமரன் சரவணன், டைரக்டர் திருலோகசந்தர் எல்லாரும் தங்கள் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

கடைசியாக அவர்களுக்கும் நான் என் நன்றியைச் சொல்லிக் கொள்ளுகிறேன்.

அவர்களுடன் பிறவா விட்டாலும், என்னை அவர்களது சகோதர னாகாவ பாவித்து, அவர்களுக்கு இல்லாத வசதியையும் எனக்கு செய்து கொடுத்து, இத்தகைய மணியமான இடத்தில் படப்பிடிப் பைப் பார்க்க வசதியளித்தமைக்கு நான் வேறு என்ன சொல்லிக் கொள்ள முடியும்?

 

பேசும் படம் டிசம்பர் மாதம் 1965

Comments

  1. How to Make Money with Casino Games and Make Money
    Casino games are the most commonly played casino games around. They have high-quality graphics, excellent gameplay and a rich casino งานออนไลน์ environment. It's

    ReplyDelete

Post a Comment